குறிப்பாக திருகோணமலை, மூதூர், கிண்ணியா, மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்த சிரேஷ்ட பிரஜைகளுடன் சந்திப்பை நடத்தினார்கள்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயகவின் பணிப்புரைக்கமைய கடந்த 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் குறித்த முஸ்லிம் இராணுவ அதிகாரிகள் இந்த சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்கள்.
குறிப்பிடப்பட்ட பிராந்தியங்களில் வரலாற்று ரீதியாக நிலவும் சகோதரத்துவத்தை தொடர்ந்து பேணிப் பாதுகாக்கும் முகமாகவும், அனைத்து சமூகத்தினரோடும் ஒன்றிணைந்து, அடிப்படைவாதிகளை எதிர்கொள்ளும் ஒரு புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக இருக்கும் முகமாகவும் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து புனர்வாழ்வுப் பணிப்பாளராக செயற்படும், பிரிகேடியர் எம்.ஏ.அஸாத் இஸ்ஸதின் தெரிவிக்கையில், “மிலேச்சத்தனமான அடிப்படைவாத இஸ்லாமியக் குழு மேற்கொண்ட ஒரு செயற்பாடு காரணமாக முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதம் அமைதியை போதிக்கும் ஒரு மதம். இந்த மதம் வன்முறையை ஆதரிக்காது.
இதனால் முஸ்லிம் சமூகத்தினர் மீது ஏற்பட்டுள்ள பெரும் களங்கத்தை, எங்களது ஒற்றுமை, புரிந்துணர்வு, இணக்கப்பாட்டின் ஊடாக இல்லாமற்செய்ய வேண்டும்.
இதனை இளம் சமுதாயத்தினருக்கும் தெளிபடுத்துவதுடன், அவர்களிடம் சமூக ஒற்றுமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே, இப்போது ஏற்பட்டுள்ள நிலையை, இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டத்தின் மூலம் குறித்த இணக்கப்பாட்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று அவர் தெரிவித்தார்.