கடந்த 2018ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பிய வீட்டு விற்றனைச் சந்தையில் 5.3 பில்லியன் டொலர்கள் நிதி முறைகேட்டின் ஊடான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வீட்டுக் கொள்வனவுகளின் மொத்தப் பெறுமதியில் ஐந்து சதவீதம் நிதி முறைகேட்டின் ஊடாக முதலீடு செய்யப்பட்ட பணம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சில சட்டக் குறைபாடுகளினால் மாகாண வீட்டு விற்பனைச் சந்தை நடவடிக்கைகளில் குற்றாவளிகள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், நிதி முறைகேட்டுக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களின் தலையீடு காரணமாகவே மாகாணத்தின் வீட்டு விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.