யத் தொழில் வாய்பபுகளை இல்லாது செய்யும் டக் ஃபோர்ட் அரசாங்கத்தின் திட்டத்தினை, பெரும்பாண்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
குறிப்பாக ஒன்ராறியோ மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
முதல்வர் டக் ஃபோர்ட்டின் பல்வேறு விதமான திட்டங்கள் தொடர்பில் 1,836 ஒன்ராறியோ மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டோரில் 48 சதவீதமானோர் இந்த ஆசிரியர் தொழில் குறைப்புத் திட்டத்தை மிக மிக கடுமையாக எதிர்த்துள்ளனர்.
அதேவேளை, 62 சதவீதம் பேர் இந்த திட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து்ளளனர். 23 சதவீதம் பேர் மட்டும் இந்த திட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் ஒன்ராறியோ பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தினையும் பெருமளவானோர் நிராகரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.