ற்ற தேடுதல் நடவடிக்கையில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.
இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையும் சோதனையிடப்பட்டது. அங்கு தியாகி திலீபனின் உருவப்படம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிற்றுண்டிச்சாலையை நடத்துபவர் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.