29 வயதுடைய டோபி வீக்மேன் எனப்படும் எட்மன்டன் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த மே மாதம் 2ஆம் திகதி, தனது வீட்டில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, டோபி வீக்மேன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து, குறித்த பெண் இதுகுறித்து முறையிட்டதன் பின்னர், எட்மன்டன் பொலிஸ் அதிகாரி தனது பதவியை துறந்துள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், இதுகுறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை.