ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றது.
ஓட்டமாவடி மற்றும் ஆலங்குளம் பகுதியில் திங்கட்கிழமை மாலை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த போது மினி சூறாவளி ஏற்பட்டது.
அந்தவகையில் மஜ்மாநகர் கிராமத்திலுள்ள ஸகாத் வீட்டுத் திட்டம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டம் என்பவற்றில் பதினாறு (16) வீடுகளின் ஓடுகள் பறந்து சேதமடைந்து காணப்படுகின்றது.
அத்தோடு மஜ்மாநகர் கிராமத்திலுள்ள சீமெந்து கல் வெட்டும் நிலையத்தின் கூரைத் தகடுகள் வீதியோரங்களில் பறந்து காணப்படுகின்றது. மேலும் தென்னை, வாழை போன்ற பயன் தரும் மரங்களும் நிலத்துடன் சாய்ந்து விழுந்துள்ளன.
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த போது மினி சூறாவளி வீசியதால் வீட்டில் இருந்த எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.