மாகாணங்களில் தங்கியிருக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அதேபோல் எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து பாடசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மாகாண ஆளுநர்களை இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது மாகாண ஆளுநர்களிடம் தற்போதைய நிலைமைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் அங்கு பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விசாரித்தார்.
உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்புக்களுடன் ஆளுநர்மார் அடிக்கடி சந்தித்து பேச்சுக்களை நடத்துமாறும், எக்காரணங்களுக்காகவும் மாகாணத்தை விட்டு வெளி வேலைகளுக்கு இப்போதைக்கு செல்ல வேண்டாமென்றும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக் கொண்டார்.
தமது கூட்டங்களுக்கு மட்டும் கொழும்புக்கு வருமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி மாகாணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஆளுநர்களின் பொறுப்பென்றும் கூறினார்.