பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் மாணவரொருவர் உயிரிழந்ததுடன் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாடசாலையை சேர்ந்த இருமாணவர்களால் நேற்றையதினம் உள்ளூர் நேரம் நண்பகல் 2 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 18 வயதான கென்ரிக் காஸ்டிலோ ஏன்டா மாணவனே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் பெண் எனவும் மற்றவர் 18 வயதான டெவன் எரிக்சன் எனும் மாணவன் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய இருமாணவர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட 115 ஆவது பெரிய அளவிலான துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.