உலகில் உள்ள விமான நிலையங்களை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு d’AirHelp என்ற நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
132 விமான நிலையங்களைக் கொண்ட குறித்த பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரான்ஸினைச் சேர்ந்த சில விமான நிலையங்கள் தரவரிசையின் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில் ஓர்லி சர்வதேச விமான நிலையம் 126 வது இடத்தினை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 121 ஆவது இடத்தில் சாள்-து-கோல் விமான நிலையம் உள்ளது. சரியான நேரம், தரம், உணவு வழங்கல் போன்ற காரணிகள் சாள்-து-கோலினை நூறுக்கு வெளியே தள்ளியுள்ளது.
லியோன் நகரின் Saint-Exupéry விமான நிலையம் ஆச்சரியமாக 119 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளது. இங்குள்ள Bordeaux-Mérignac நிலையம் 100 இடத்தினை பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில், முதல் நூறு இடங்களுக்குள் வந்த ஒரே பிரான்ஸ் விமான நிலையம் Toulouse-Blagnac நிலையமாகும். இது 89 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.