இப்ராஹிம் ஆகிய இரு அமைப்பினையும் தடை செய்யும் வர்த்தமானி இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் குறித்த வர்த்தமானி நாளைய தினமே (திங்கட்கிழமை) வெளியாகும் என ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொடவிடம் வர்த்தமானிக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி செயலகம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் நாளைய தினம் வர்த்தமானி வெளியிடுவதற்கு தீர்மானம் எடுத்ததாகவும் செனவிரத்ன கூறியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளார் என்றும் ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அமைப்புடன் வேறு சில அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் என புலனாய்வுதுறையினர் தெரிவித்தமையால், அந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் அமைப்புகள் உட்பட மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால நடைமுறைகளின் கீழான விசேட அதிகாரத்தின் கீழ் இந்த அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏப்ரல் 27 அன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அத்தோடு இரு அமைப்புகளின் அனைத்து சொத்துகளும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதும் இந்த அமைப்புக்களுடன் வேறு சில அமைப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற நாட்டில் புலனாய்வு பிரிவுகளால் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.