ணாமல் போயிருந்த இளம் பெண்ணும் அவரது மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
கல்ஹரி பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 வயதான Jasmine Lovett மற்றும் அவரது மகள் Aliyah Sanderson ஆகிய இருவரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தனர்.
அதற்கு முதல்நாள் அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான பிரித்தானியாவைச் சேர்ந்த Robert Leeming உடன் வெளியே சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தாங்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதாகவும், பின்னர் தான் ஒருவேலையாக சென்று திரும்பியபோது JasmineI யும் அவரது மகள் Aliya யாவையும் காணவில்லை என Robert தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட Robert யிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து சுமார் 50 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு குழுவினர் கடந்த பல நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில், மரங்கள் அடர்ந்த பகுதியில் இருவரது சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த பொலிஸார், பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த பிரித்தானியரான Robert ஐ மீண்டும் கைதுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.