நிலையில், முன்னெச்சரிக்கையாக இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், புவனேஷ்வர் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ஃபானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஃபானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப் பகுதியில், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
ஃபானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பயணிகளின் பாதுகாப்பு கருதி 43இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகளையும் தென்கிழக்கு ரயில்வே இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது