அந்தவகையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கடும் வேகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்ற முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இஸ்லாம் அடிப்படைவாத அமைப்பின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகையில், அது தொடர்பாக பிரதமர் கருத்துக்களை தெரிவிக்கும் போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாகவே கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் சர்வதேச பயங்கரவாதத்தைக் காட்டி இந்த நாட்டின் மக்களையும் தொழிற் சங்கங்களையும் ஒடுக்கும் திட்டங்களையே பிரதமர் மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.