மிகப்பெரிய நகரான கல்கரி 13 அபாயகரமான பேரழிவுகளை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இயற்கையினால் அல்லது மனிதனினால் கல்கரியில் 65 பாதிப்புச் சம்பவங்கள் பதிவாகக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் மதிப்பீடு செய்திருந்தது. அதில் 13 சம்பவங்கள் அபாயகரமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பேரழிவுகளை சமாளிப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையிலான இணையத்தளமொன்றை அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும், தமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கே தமது நிறுவனம் முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம் என்றும் குறித்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது