இளைஞர்கள் ஏன் தீவிரவாத இயக்கங்களில்
இணைகிறார்கள் என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. அதற்கான காரணம் மூளைச் சலவை அல்லது அந்த இளைஞர்களின் முட்டாள்தனம் என்கிற சாதாரண குறிப்பு அதற்கான விளக்கம் ஆகிவிடாது. மூளைச் சலவை என்பதற்கு அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை எதுவும் கிடையாது. படித்த இளைஞர்கள் ஐ,எஸ் (இஸ்லாமிய அரசு) அமைப்பில் சேருவது சொர்க்கம் சென்று அவர்களின் 21 கன்னிகளைப் பெற்றுக் கொள்வதற்காக என்று கணிப்பிடுவது அப்பாவித்தனமாக உள்ளது! பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் தீவிரமயமாக்கப்பட்ட அநேக இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ்க்காகப் போராடினார்கள். குறைந்தபட்சம் ஸ்ரீலங்கா முஸ்லிம்களில் ஒருவரான கமிகாஸி (தற்கொலை போராளி) பிரித்தானிய பயிற்சி பெற்ற ஒருவர், அவருக்கு நான்கு பிள்ளைகள், செழிப்பான ஒரு வர்த்தகம் என்பனவற்றுடன் கொழும்பில் மில்லியன் டொலர் பெறுமதியான வீடும் உள்ளது. பிரித்தானியாவில் உள்ள சிவப்பு செங்கல் கட்டிடத்தில் உள்ள பல்கலைக்கழகம் வழங்கும், குறுகிய பாடமான “தகவல் தொழில்நுட்பம்” போன்ற பிரித்தானியக் கல்வி பரவலான அறிவியல் அல்லது கலாச்சாரப் பாடங்களைத் தொடுவதில்லை மற்றும் ஏற்கனவே உள்வாங்கப்பட்ட நம்பிக்கை அமைப்புகளில் அது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்துவதில்லை. எங்களிடம் உள்ள அமைச்சர்கள் மிகவும் இரகசியமாக இந்தியாவிலுள்ள திருப்பதிக்குச் செல்வில்லையா?
இந்த தீவிரவாதிகள் முந்திய தலைமுறையைச் சேர்ந்த இளம் அறிவாளிகளை விட வித்தியாசமானவர்கள் இல்லை, அவர்கள் முதலாளிகள் எதிர் தொழிலாளிகள் என்கிற எளிய தத்துவத்தை நம்பினார்கள், மற்றும் எப்படி தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளிகளை கீழிறக்கி வர்க்கபேதமற்ற சமூகம் ஒன்றை உருவாக்கினார்கள் அங்கு அரச அதிகாரம் கூட மறைந்து போனது. அவர்கள் “முடிவுதான் வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது” என்பதை நம்பினார்கள் – எனவே எங்களிடம் ஸ்டாலின், மாவோ, ரிசி ட்டாங்,பொல் பொட், கிம் சுங் போன்ற எண்ணற்ற இடதுசாரி மாவோயிஸ்ட் – குவாரியஸ்ட் – நக்ஸலைட் குழக்களும் மற்றும் ஸ்ரீலங்காவில் தங்களின் இலக்கினை அடைவதற்காக அப்பாவிகளைக் கொன்ற விஜேவீரவின் ஜேவிபியும் இருந்தன. இந்த இலக்கிற்கு “வரலாற்று சடவாதம்” என்று வரையறுக்கப்பட்ட இயங்கியல் சடவாதம் மூலம் ஒரு வரலாற்று விதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சடவாதத்தின் கணிப்புகளுக்கு முரணாக இந்த இயக்கங்கள் சோவியத் ஒன்றியத்தில் 1930 முதல் 1955 வரை இயங்கிய குலாக்ஸ் எனப்படும் தொழிலாளர் முகாம்களைப் போல அரக்கத்தனமான அரசியல் முகாம்களையே உருவாக்கின.
இதேபோல இந்த மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்பது, இளம் முஸ்லிம்களுக்கு உலகம் கொண்டிருப்பது,முஸ்லிம்கள் (நல்லவர்கள்) மற்றும் முஸ்லிம் சமய நம்பிக்கையற்றவர்கள் (கெட்டவர்கள்) என்கிற ரீதியில் இஸ்லாமிய அடிப்படைவாத பார்வையில் கல்வி புகட்டப்பட்டுள்ளது. பல கல்விகற்ற அராபியர்கள், 9ஃ11 உலக வர்த்தக மையத் தாக்குதல் அராபியத் தற்கொலைத் தாக்குதல்காரர்களால் நடத்தப்பட்டது என்பதை நம்பவில்லை. அவர்கள் எண்ணுவது, பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் எண்ணெய் வளமிக்க மத்தியகிழக்கு நாடுகள்மீது தாக்குதல் நடத்தவும் மற்றும் இஸ்லாத்துக்கு எதிரான சிலுவைப்போரை மீண்டும் ஆரம்பிப்பதற்குமாக யூத குழுக்கள் மற்றும் புஷ் அரசாங்கம் என்பன ஒன்று சேர்ந்து செய்த வேலைத்திட்டம் என்று. மேற்குநாட்டவர் வழக்கமாக தங்கும் ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பனவற்றை குறி வைத்து எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு இதுவே காரணம்.
மார்க்சிஸ்ட்டுகளின் நம்பிக்கையின்படி புரட்சிக்கான இயங்குவியல் சடவாதம் அவசியமான ஒரு இறுதி நிலைக்கு வழிவகுக்க அழைப்பு விடுக்கும் என்பதைப் போலவே ஒரு ஜிகாதி நடவடிக்கைக்குப் பின்னர் வரலாறு இஸ்லாமிய அரசுக்கு அவசியமான வழியை ஏற்படுத்தும் என்று இஸ்லாம் வரையறுக்கிறது. “புனித போரானது” இஸ்லாமிய தோழர்களின் புரட்சியை மாற்றீடு செய்கிறது. மத்திய கிழக்கிலிருந்து வந்த உணர்ச்சியூட்டும் அரபு ஆசிரியர்கள் இளம் முஸ்லிம்களுக்குப் போதித்த வரலாற்று விதி, ஜேவிபியினது ஐந்து பாடங்களைப் போல எளிமையானதும் மற்றும் தெளிவானதுமாகும். அவர்களது பங்கு இஸ்லாமிய அரசை நிறுவுவதாகும், ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்தும் ஷரியா சட்டம் ஒழுக்கத்தை மட்டுமல்ல ஆனால் அதேபோல பொருளாதார செயற்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது – ஒரு முழமையான சித்தாந்தம் விற்பனை செய்யப்படுகிறது.
அநேகமான ஸ்ரீலங்கா வாசிகள் அல்லது அமைச்சர்கள் கூட மேற்கில் தயாரான யோசனைகளை அவை மேற்கில் இருந்து வந்தவை என்பதற்காக உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கு போதுமான அளவு தயாராக உள்ளார்கள்,அதே போலவே இந்த முஸ்லிம் இளைஞர்களும் கூட பழைய ‘கலிப்பேற்’ எனப்படும் ஒரே மதத்தைக் கொண்ட பழைய இஸ்லாமிய அரசினைப் பற்றி மகத்தான ஒரு படத்தை அவர்களுக்கு வரைந்து காட்டிய இந்த புகழ்பெற்ற மத்திய கிழக்கு ஆசிரியர்களின் வார்த்தைகளை உடனடியாக ஏற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களாக உள்ளார்கள். இலட்சியவாதியான ஒரு முஸ்லிம் இளைஞனுக்கு முன்னால் அவனது அடிப்படைவாத “சர்வதேச ஆசிரியர்களால்” போதிக்கப்பட்ட ஒரு தெளிவான ஜிகாத் பணி உள்ளது. அல்லாவின் பெயரால் இஸ்லாமிய கலிப்பேற் எனப்படும் நியமிக்கப்பட்ட உன்னத தகுதியை அடைவதே அவர்களின் பணியாக மாறுகிறது .இந்த முடிவை அடைவதற்கான வழி எதுவானாலும் அது நியாயப்படுத்தப் படுகிறது. உழைக்கும் வர்க்கம் புரட்சிகர வழியில் அரசைக் கைப்பற்றுவதற்காக முதலாளித்துவ இராணுவத்துடன் போராடி மடிவதற்குக் கூட தயாராக உள்ள “சிவப்புத் தோழர்கள்” போலவே இது அவர்கள் செய்யும் ஒரு தியாகம்.
இளம் பல்கலைக்கழக மாணவன் ஜேவிபி இனது ஐந்து பாடங்களையும் உடனடியாக உறிஞ்சிக் கொள்கிறான், இருப்பினும் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட முட்டாள்தனமானவர்கள் சட்டபூர்வ அரசை தூக்கியெறிய முயன்றார்கள், ஏனென்றால் அந்தச் செய்தி அவர்களுக்கு முன்கூட்டியே போதிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பொருத்தமானதாக இருந்தது. ஜேவிபிக்கு முன்பு வந்த லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யுனிஸ்ட் கட்சி போன்றவை பொருளாதார கட்டமைப்பை எந்த வழியை பயன்படுத்தியாவது மாற்றியமைக்க வேண்டும் என்பதினால் இந்த எண்ணங்களை ஸ்ரீலங்கா இளைஞர்களின்மேல் திணித்தார்கள். அவர்களின் அதிகாரத்திற்கும் அரச அதிகாரத்துக்கும் இடையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருந்ததினால் அது பொருத்தமற்றதாகத் தோன்றியது.
ஆரம்பகால மார்க்சிஸ்ட்டுகள் அதிகாரத்தை கைப்பற்றும் நம்பிக்கையில் போர்க்குணமிக்க ஹர்த்தால்களை அதிகரிப்பதற்காக தொழிற்சங்கங்களைத் தூண்டிவிட்டார்கள். ரஷ்யாவின் ‘மென்ஷேவிக்’ அரசாங்கம் போலுள்ள பண்டாரநாயக்கா அரசாங்கத்தை மாற்றீடு செய்யப்பேகும் ‘புல்ஷேவிக்குகள்’ தாங்கள் என அவர்கள் எண்ணினார்கள். ஆகவே புரட்சிகர கட்சியான லங்கா சமசமாஜக்கட்சி தேர்தல்களில் பிரபலம் பெறுவதைப் பற்றிக் கவலைப் படவில்லை. லங்கா சமசமாஜிக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான கலாநிதி ஒஸ்மன்ட் ஜயரத்ன மற்றும் பொறியிலாளர் விஜேதோரு ஆகிய இருவரும், மொழி சமத்துவக் கொள்கை 50 விகிதத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ள தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தி புரட்சிக்காக மூலோபாய ரீதியில் வடிவமைக்கப்பட்ட ஒரு கொள்கை மற்றும் தேர்தலுக்காக
வடிவமைக்கப் பட்டதல்ல என்று எனக்கு உறுதியளித்தார்கள். அவர்கள் புரட்சியைக் கைவிட்டு திருமதி பண்டாரநாயக்காவுடன் இணைந்தபோது, அவர்கள் சம உரிமை என்பதை தூக்கி எறிந்துவிட்டு வர்க்கபேதமற்ற, பிரிவுபேதமற்ற, இனபேதமற்ற, கம்யுனிச நாட்டுக்கு மிகவும் திறமையான ஒரு மொழி என பெரும்பான்மை மொழியைத் தழுவிக் கொண்டார்கள்.
தீவிரமயமாக்கப்பட்ட இளம் முஸ்லிம்களின் விஷயத்தில், அவர்கள் கூட தாங்கள் காணும் முற்றிலும் ஒழுக்கக்கேடான உலகத்தை மாற்றவேண்டும் என நம்புகிறார்கள். அடிப்படைவாத அராபிய ஆசிரியர்கள் அவர்களுக்குக் கற்றுத்தந்த கடுமையான ஒழுக்கத்துடன் உலகம் ஒத்துப்போகவேண்டும் என நம்புகிறார்கள். ஒரு முந்தைய காலகட்டத்தில் மாட்டின் லூதர் கூட இத்தகைய ஒழுக்கம் சார்ந்த செய்தி வெற்றி பெற்றதைக் கண்டார். இந்த இளைஞர்கள் தங்கள் ஒழுக்கம் மற்றும் இலட்சிய வெறி என்பனவற்றுக்கு ஒரு வெளிச்செல்லும் வழியையும் அத்துடன் இத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஊடாக ஒரு அடையாளத்தையும் கண்டார்கள். அவர்களின் பெற்றோரின் சமூகம் 21ம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான பெறுமதியான இலட்சிய நோக்கங்களை அவர்களுக்கு வழங்குவதில் தோல்வியடைந்திருந்தது, மேலும் அது தீவிரவாத ஆசிரியர்கள் ஒரு புதிய பாணியில் அவர்களைப் பாதிக்க வைப்பதற்கு அனுமதியளித்தது.
இந்த செயல்பாடு “மூளைச் சலவை” இல்லை, ஆனால் மிகக் கடுமையான தொற்று நோய் ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதற்குச் சமமானதாகும்.
இலங்கை தமிழரசுக் கட்சி (ஐரிஏகே) 1949ல், சனத்தொகையில் வெறும் 10 விகிதமே உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு கட்டாயமாக “தனியான ஒரு தாயகம்” வேண்டும் எனவும், அவர்களுடைய போராட்டங்கள், அவர்களுடைய சொந்த அரசை நிறுவுவதின் மூலம் அவர்களது சொந்த விவகாரங்களை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள் எனப் பிரகடனம் செய்தது. அந்தக் கட்சியின் தலைவர்கள் வடக்கில் செல்வந்தர்களான உயர் சாதி நில உடமையாளர்களாக இருந்தார்கள் ஆனால் அவர்கள் வாழ்ந்ததோ தென்னிலங்கையின் சிறந்த பகுதியான கொழும்பில். வடக்கில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் தென்பகுதி அரசியல்வாதிகள்மீது (தங்களைத் தவிர) குற்றம் சுமத்தினார்கள். சோழ சாம்ராஜ்யத்துடன் அடையாளம் காணும் அதன் தலைவர்கள் சிலர், இளைஞர்களின் உணர்வுகளைக் கவருவதற்காக உருவாக்கிய ஆத்திரமூட்டும், இனவாத மற்றும் பிரத்தியேகமான சித்தாந்தம் இதுவாகும். சிங்களம் மட்டும் கூக்குரலை நோக்கி மேற்கொண்ட சுயபாஷை நகர்வு முனைவாக்கத்துக்கு மேலும் எரிபொருள் வழங்கி எரியூட்டுவதைப் போலானது. வரலாற்றில் ஒரு வித்தியாசான திருப்பமாக, 20 ம் நூற்றாண்டின் விடியல்வரை சோழர்களின் படையெடுப்புக்கு எதிரான சிங்களவர்களின் காவல் நகரமாக விளங்கிய “பட்டகோட்டே” என்கிற நகரம் வட்டுக்கோட்டையானதுடன், வட்டுக்கோட்டை தீர்மானம் உருவான இடமாகவும் மாறியது. இன ரீதியாக தனியான தமிழர் தாயகமான “ஈழம்” என்பதை அடைவதற்கு ஒரு பிரிவினைவாத ஆயுதப் போராட்டத்துக்கு அந்த தீர்மானம் அழைப்பு விடுத்தது.
தாராளமய மதிப்புக்களைக் கொண்ட படித்த தமிழ் பெற்றோர்களால் நன்கு படித்த தங்கள் பிள்ளைகள் ஏன் வன்முறையான ஈழ இனவாத இயக்கங்களில் இணைகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பெரும்பான்மையோரின் பிரதிபலிப்பு 1983ல் மோசமான
இனக்கலவரமாக வெடித்து ஒரு கொடிய யுத்தமாக விரிவடைந்தபோது, முடிவில் அந்தப் பெற்றோர்களும் இதே கிருமிகளின் தொற்றுக்கு ஆளானார்கள். குறிப்பிடத் தக்கதாக ஜெயரட்னம் வில்சனது அரசியல் எழுத்துக்கள், ஒரு டசின் வருடங்களுக்குள் தமிழர் தாயகங்கள் பற்றிய ஸ்ரீலங்கா வரலாற்றில் பிரிவினைவாத நிலைப்பாட்டிற்கு ஆதரவாக மாறும் நிலை அவரது அனுபவ ரீதியான அணுகுமுறையிலிருந்து உருவானது, முந்தைய தசாப்தங்களில் அவர் அதை மிகக் கடுமையாக நிராகரித்திருந்தார்.
இதே நிகழ்வு யூதமதத்தின் மிகவும் அறிவார்ந்த உலகத்திலும் உள்ளது. இஸ்ராயேலில் உள்ள இளம் யூத அடிப்படைவாதிகள் சியோனிசத்தைக் கட்டியெழுப்புவதற்காக சண்டையிட்டு கொலையும் செய்தார்கள். அவர்களும் கூட இஸ்ரேயாலின் அரசியல் கட்சியான லிகுட்டின் சித்தாந்தத்தை நிலைநிறுத்துகின்ற இடைக்கால யூதமத ஜிங்கோயிஸ்ட்டுகளால் இயக்கப் படுகின்றார்கள். சியோன் அல்லது கலிபட்டின் தார்மீக உரிமை கம்யுனிச அரசின் இயங்கியல் தேவை அல்லது ஒரு ஈழவாதியின் வரலாற்று கோரிக்கைக்கான உரிமையாகிறது, இதை வெறுமே கண்மூடித்தனமான மனித உரிமைகள் அல்லது பலஸ்தீனியர்கள் தங்கள்
இருப்புக்காக விடும் கோரிக்கை என்றும் சொல்லலாம். இர்குன் ( ஐசுபுருNஇ) போன்ற சியோனிச பயங்கரவாத இயக்கத் தலைவர்கள், உதாரணமாக மெனாகெம் பிகின் மற்றும் பெஞ்சமின் நெத்தனியாகு போன்றவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் பிரதம மந்திரிகளாகவும் ஆனார்கள்.
லெகி (டுநுர்ஐ) என்கிற மற்றொரு பயங்கரவாத அமைப்பு “ஆயுதப் போராட்டம் அனைத்து
இஸ்ராயேலியர்களினதும் கடமை, ஒவ்வொரு யுதனும் ஒரு போர் வீரனாக மாறவேண்டும். மதம் ….மனித முயற்சியின் வேறு எந்த அம்சத்துக்கும் மேலானதாக ஆயுதப்போராட்டத்தை ஒரு சடங்காக எழுப்புகிறது. இயந்திரத் துப்பாக்கிகளுடன் ஹல்லேலூயா”என்று வலியுறுத்தியது. சியோனிசப் பயங்கரவாதம் முதலில் பிரித்தானியர்களுக்கு எதிராக இயங்கியது, பின்னர் பலஸ்தீனியர்களுக்கு எதிராகத் திரும்பியது, பலஸ்தீனியர்கள் கடுமையான ஆக்கிரமிப்பை அனுபவித்தார்கள் ஆனால் மேற்கத்தைய வல்லரசுகளின்; உதவியினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் பாதுகாக்கப் பட்டார்கள். பலஸ்தீனியர்களும் அரபு நாடுகளால் அளிக்கப்பட்ட நிதியுதவியினால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா போன்ற யூதர்களுக்குச்; சமமான எதிர் குழுக்களை நிறுவினர். இந்த பயங்கரவாத அமைப்புகள் எல்லாம் படித்த இளைஞர்களை வெகு எளிதாக பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு ஆட்சேர்ப்புச் செய்தன. லெகி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இற்ஷகாக் ஷமீர் இஸ்ராயேலின் பிரதம மந்திரியாகவும் கடமையாற்றியுள்ளார். இந்த முடிவு நியாயப்படுத்துவது அவர்களது விசுவாசத்துக்கு ஏற்ப வன்முறையை பயன்படுத்தலாம் என்று.
பிரித்தானியருக்கு எதிரான சியோனிச பயங்கரவாத இயக்கங்கள் நாஸிசம் அதன் நம்பகமான வன்முறையை ஐரோப்பாவில் கொண்டு வரப்பட்ட நேரத்தில் உதயமானவையாகும், டர்ர்வினின் பரிணாமத்தை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தி அதை ஒரு கோட்பாட்டு ரீதியாக பின்தொடர்வதைப் பயன்படுத்தி உதயமானவை. டார்வினின் இந்த தவறான பிரதிநிதித்துவம் டெனிசன் போன்ற இலக்கிய மனிதர்களால் ஆரம்பிக்கப்பட்டவை, அவர் இயற்கையை “பற்களும் மற்றும் கூரிய நகங்களும”; சிவப்பாக இருப்பதாகச் சித்தரித்தார், அறிவியல் ரீதியாக அது தவறானது. டார்வினின் பரிணாமம் வேலை செய்வது அதிக அளவிலான உயிரணுக்கள் மற்றும் மரபணுக்கள் இயற்கையை பயன்படுத்த ஒத்துழைக்கும் போதுதான் மற்றும் போட்டியிடும் போது அல்ல. இதைப்பற்றி நான் எனது புத்தகமான “ஒரு இயற்பிலாளரின் பார்வையில் புத்தியும் மற்றும் விஷயமும்(உலக அறிவியல்)” 3வது அத்தியாயம் மற்றும் புத்தகத்தின் வேறு சில இடங்களில் விரிவாக விவாதித்துள்ளேன்.
துரதிருஸ்டவசமாக தற்போது கிடைக்காத புத்தகமான,கலாநிதி ஜேன் ரூசெல் எழுதிய “1931 – 1947 வரை டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இனவாத அரசியல்” (திசாரா பதிப்பகம்) என்ற தலைப்பிலான தனது புத்தகத்தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தேசிய தலைவர்களை இரண்டு இன முகாம்களிலும் முறையே அவர்களது ஆர்வலர்கள்; “பொக்கற் ஹிட்லர்கள்” எனக் குறிப்பிட்டார்கள் என எழுதியுள்ளார். பிரபாகரன் சயனைட் வில்லைகளை கழுத்தில் அணிந்துள்ள அவரது குழந்தை போர்வீரர்களை தற்கொலை தாக்குதலில் பட்டம் பெற வைத்ததுதான் அத்தகைய தேசியவாதத்தின் இறுதி விளைவாக உள்ளது. அது ஹிந்து சித்தாந்தம், தீவிர பழமைவாத யாழ்ப்பாண கிறீஸ்தவத்தால் வளர்க்கப்பட்டது, அது சிவனை அழிக்கும் கடவுளாகவும் மற்றும் கிறீஸ்தவ கடவுளை பாகுபாடற்ற சிவனாகவும் ஆக்குகிறது.
சாகசம், கலை, அறிவியல் மற்றும் தொழில் வாய்ப்புகள் மூலம் இளைஞர்களிடத்தில் கருத்துவாதம் மற்றும் கிளர்ச்சித்தன்மை என்பனவற்றை வழங்குவதில் தோல்வியடைந்த சமூகங்கள் தீவிரவாத சித்தாந்தங்களின் அரங்கமாக மாறிவிடுகின்றன. இளம் பயிர்களுக்கு அவற்றின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் பூச்சிகள் களைகள் மற்றும் மோசமான காலநிலை என்பனவற்றில் இருந்து பாதுகாப்பு அவசியமாகிறது அதேபோலவே இளம் குடிமக்களுக்கும் பாதுகாப்பு அவசியமாகிறது. வளர்ந்து வரும் “திறந்த சமூகங்கள்” கூட வெளிப்புற பணத்தின் ஆதரவுடன் உருவாகும் துரோக சக்திகளால் அவர்களது பாரம்பரிய சமூகக்கட்டமைப்பு நசுக்கப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
பண்டைக்கால ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் அசோகனின் காலந்தொட்டு பெண்களுக்கும் மற்றும் தாழ்ந்த சாதியினருக்கும் சமத்துவம் வழங்குவது முதல், அனைத்து மத விசுவாசங்களுக்கும் அடைக்கலம் வழங்கி ஒரு கருணையுள்ள சமூகத்தை ஸ்ரீலங்கா உருவாக்கியுள்ளது. எந்த மதத்தைச் சேர்ந்தவரையும் எரிக்கவில்லை. எனினும் முடிவானது விரும்பத்தக்கது முடிவை அடைவதற்குப் பயன்படுத்திய வழியை நியாயப்படுத்த முடியவில்லை
ஏனென்றால் சரியான பாதைக்கான முக்கிய கூறு பௌத்தம் மற்றும் ஜெயின் மதங்களின் கோட்பாட்டில் இருந்தும் மற்றும் நாகர்ஜூனா போன்ற ஆசிரியர்களின் கீழ் உருவாக்கப்பட்ட
இந்துசமய வடிவங்களில் இருந்தும் பெறப்பட்டவை ஆகும். இலங்கையின் ஆட்சியாளர்கள் டச்சுக்களின் அடக்குமுறையின்போது கிறீஸ்தவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் அடைக்கலம் வழங்கினார்கள். சமீப காலத்தில் தேசத்தின் பண்டைய மதிப்புகள் அரசியல் இடது மற்றும் வலது சாரியினரிடமிருந்து வரும் தீங்கான போதனைகள் காரணமாக ஒட்டுமொத்தமாக தூக்கி எறியப்பட்டுள்ளன, அவைகள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க மதத்தைப் பயன்படுத்துகின்றன.
ஐரிஸ் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோர் ஐரிஸ் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ வன்முறைகளுக்கு உரமும் ஊக்கமும் வழங்குகின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் தொண்டு நிறுவனங்களும் இளைஞர்களிடையே அழிவுகரமான முதலாளித்துவத்தை ஊட்டி வளர்க்கின்றன மற்றும் அமெரிக்காவின் விருப்பத்தை முன்னிறுத்தி அவர்களின் தேர்தல்களில் தலையிடுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் மூலம் அமெரிக்கா வெளிப்படுத்தும் விதி அனைத்து மனித உரிமைகளையும் மறைத்து விடுகிறது. அதேபோல அடிப்படைவாத எண்ணெய் ஷேக்குகள் மசூதிகள், மதரசாக்கள் என்பனவற்றைக் கட்டிக்கொடுத்து அடிப்படைவாத நிகழ்ச்சி நிரலை முன் தள்ளுகின்றனர், இது மியன்மார், ஸ்ரீலங்கா அல்லது வேறு இடத்தில் மோதல் ஏற்படக் காரணமாகிறது, அதேவேளை இதற்காக பெரும்பான்மை இனத்தவரின் சகிப்புத் தன்மையின்மை மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சித்தாந்தங்கள் கருத்துவேறுபாடு மற்றும் திறந்த விவாதங்களை நிராகரிக்கின்றன. மற்றவர்களை பலவந்தமாக அழித்துவிடுவதாக அவர்கள் அச்சுறுத்துகிறார்கள்.
ஆனால் பல அரசியல்வாதிகள் பணம் மற்றும் செல்வாக்குக்கு ஆசைப்பட்டு “ஒட்டகத்தை கூடாரத்துக்குள் வர அனுமதித்தவர்களின் நிலைக்கு ஆளாகிறார்கள்” மற்றும் பின்னர் அது மிகவும் தாமதமான கதையாகி விடுகிறது.
சந்திரே தர்மவர்தன