ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தன்னை இலங்கைக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ நாடு கடத்த வேண்டாம் எனக்கோரி பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துர மதூஷ் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று (வியாழக்கிழமை) டுபாய் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த மனு தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 5 திகதி டுபாயில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் வைத்து பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இதுவரை நாடுகடத்தப்பட்ட நிலையில், மாகந்துரே மதூஷ் மாத்திரம் டுபாயில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று டுபாய் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.