வரவுசெலவுத் திட்டத்தினை பரிந்துரைக்க வேண்டும் என அல்பேர்ட்டா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் சஸ்காச்சுவான் நிதி அமைச்சர் ஜானீஸ் மெக்கின்னான் தலைமையிலான வரவு செலவு திட்ட குழுவிடம் அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
வரவுசெலவுத் திட்டத்தினை பரிந்துரை செய்வதற்காக, ATB நிதித் தலைவர் டேவ் மோவத் மற்றும் அல்பேர்ட்டா பல்கலைக்கழக முன்னாள் வணிகபிரிவின் தலைவர் மைக் பெர்சி ஆகியோர் அடங்கிய குழு ஒன்றினை முதல்வர் நியமித்திருந்தார்.
இந்த குழு வரவு செலவு திட்டம் தொடர்பான தனது மதிப்பீட்டு அறிக்கையினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் மாகாண வரவு செலவு திட்டத்தை வடிவமைப்பதற்காக கையாளும் சூத்திரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் நிதி அமைச்சர் டிராவிஸ் டவுஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.