மே தின போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
அதில் அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் ஒருவரை தாக்குதவது போன்றும், மற்றுமொரு காணொளியில் கற்களை வீச எறிவது போன்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், இவை தொடர்பாக பொலிஸ் தலைமை அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எந்தவொரு அதிகாரியும் தவறிழைத்திருப்பது உறுதிபடுத்தப்படும் பட்சத்தில் அவர்கள் தண்டிக்கப்படுவர் என உட்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.