ஆண்டை முன்னிட்டு இலங்கை தமிழர்கள் அதிகம் புலம்பெயர்ந்து வசித்து வரும் கனடாவில் நினைவேந்தல் பதாதை வைக்கப்பட்டுள்ளது.
டொறொண்டோவின் முக்கிய வீதியில் Genocide Against Tamils என எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்போரோ பகுதியிலுள்ள மார்க்கம் வீதியிலே இந்த பதாதை வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கு நீதி கோரி மே மாதத்தில் உணர்வுப்பூர்வ அஞ்சலி மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வழமை.
இந்தநிலையில் இதன் ஒரு அங்கமாகவே கனடிய தமிழர்களால் இந்த நினைவேந்தல் பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.