ல்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தற்கொலை குண்டு தாரியான முகமது காசிம் முகமது ரில்வானின் மாமியாரின் வீட்டிலேயே இன்று (வியாழக்கிழமை) மாலை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட முகமது காசிம் முகமது ரில்வானின் மனைவியின் தாயார் வீட்டில் வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி ரத்நாயக்க மற்றும் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் கீழ் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்போது அங்கிருந்து தற்கொலை அங்கி ஒன்றும், 4 கையடக்கத் தொலைபேசிகள், வங்கி ஏ.ரி.எம். அட்டைகள்-2 , ரில்வானின் தேசிய அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து ரில்வானின் மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.