ஜனாதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதாலேயே மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனை அவர் குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை. 19ஆம் திருத்தம் மூலம் அந்த அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் நாடாளுமன்றத்திற்கு பிரேரணை கொண்டு வந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அவசரகால சட்டம் அமுலில் இருப்பதால்தான் மக்கள் பாதுகாப்பு தொடர்பாக நம்பிக்கையுடன் இருக்கின்றனர். சோதனை நடவடிக்கையை பூரணமாக மேற்கொள்ளும்வரை அவசரகால சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதேபோன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரவேண்டும். மத்ரசாக்களில் அரச மொழிகளில் அல்லாமல் வேறு மொழிகளில் கற்பிக்க தேவையில்லை. அதனால் மத்ரசாக்களில் கற்பிக்கப்படும் விடயங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும்.
இந்த பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அவ்வாறான நிலையை ஏற்படுத்தி மக்களை வீதிக்கு இறக்கவேண்டாம். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் தேவை என்றால் அதனை மேற்கொள்ளலாம். மதத் தலைவர்களும் அதனையே தெரிவிக்கின்றனர்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.