மெக்சிகோ கடற்கரைகளில் பெருகிவரும் துர்நாற்றம் மிகுந்த கடற்பாசி, கடல் பகுதியைப் பழுப்பு நிறமாக மாற்றிவருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலக வெப்ப அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரசாயன உரம் கடலில் கலப்பதாலும், கடலடி நீரோட்டம் காரணமாகவும், கடற்பாசிப் படலங்கள் உருவாகிக் கரைக்கு வருகின்றன.
அமேசான் நதிக்கு அப்பாலுள்ள அட்லாண்டிக் வெப்பமண்டலக் கடற்பகுதியிலிருந்து அவை மெக்சிகோவுக்கு அடித்துவரப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோல் அடிக்கடி நடக்குமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், மெக்சிகோ சுற்றுலாத்துறையை இது பாதிக்கக்கூடுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.