தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே தமிழிசை இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நம்பிக்கையினை பெறுவதற்கு, ஆழமான மக்கள் சிந்தனை, அமைப்பு ரீதியான கடுமையான உழைப்பு, தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கான தன்மை என்பன அடிப்படை காரணங்களாக இருக்க வேண்டும் எனவும், அந்த அடிப்படையில் மக்கள் இவர்களை இனிமேல் நம்ப தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய கட்சிகள் தோற்றம் பெறுகையில் எப்போதுமே ஒரு சலசலப்பு இருக்கும் எனவும் அவ்வாறான ஒரு சலசலப்பே கமல்ஹாசன், சீமான் ஆகியோருக்கு தற்போது இருப்பதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஆரம்பத்தில் வேகமாக இருக்கும் இவர்கள், காலப்போக்கில் சலித்துப்போய் அமர்ந்துவிடுவார்களென அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.