உறுப்பினர் லின் பேயக் (Lynn Beyak), செனட் சபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பழங்குடி மக்கள் தொடர்பான கடிதங்களை தனது இணையத்தளத்திலிருந்து நீக்குவதற்கு தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பழங்குடி மக்கள் தொடர்பான கடிதங்கள் இனவாதத்தைத் தூண்டும் வகையிலானது என நெறிமுறைகள் ஆணையாளர் அறிவித்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த கடிதங்களில் பழங்குடி மக்கள் சோம்பேறிகள் என்றும் தவறுகளை தேடுபவர்கள் என்றும் சித்திரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.