கைதுசெய்யப்பட்டவர் 32 வயதான ஆண் ஒருவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் டவுன்ரவுண் செயிண்ட் கெத்தரினஸ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயகரா பொலிஸார் கூறுகையில், 2700 டொலர்கள் பெறுமதியான பெண்டன்ல் துண்டுகளும், 3100 டொலர்கள் பெறுமதியான கொக்கேயின் துண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.