LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 13, 2019

முழு அதிகாரத்தை பயன்படுத்த இராணுவம் தயார் – இராணுவ தளபதி

தேவை ஏற்படின் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழுமையான அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கைபாதுகாக்க பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் உதவுவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மேல் மாகாணத்தில் பல பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சில குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் நேற்று இரவு சிலாபத்தில் ஆரம்பித்து, அவ்வாறான விடயங்களை பல இடங்களில் செய்துள்ளனர்.

இதன்போது இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் அந்தப் பகுதியில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இன, மத, கட்சி, பதவி பாகுபாடுகளை பொருட்படுத்தாது இந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அப்பாவி மக்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முயலும் குறிப்பாக மதுபோதையில் செயற்படுவோருக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றேன்.

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். புத்திசாதுர்யமாக செயற்படாதவர்கள் தொடர்பில் தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் தயார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில் முப்படையினருக்கும் பொலிஸருக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். சுமுகமாக தீர்வு காண்பதற்கே இராணுவம் விரும்புகின்றது. அதற்கு ஒத்துழைக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்வதாக” தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7