அந்த வகையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கனடாவின் ரொண்டோவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இறுதி யுத்தகளத்தில் பணியாற்றி இன்று இனப்படுகொலைச் சாட்சியாக இருக்கும் மருத்துவர் வரதராஜாவின் இறுதிப்போர்க்கால அனுபவம் குறித்து ஆங்கிலத்தில் Kass Ghayouri இனால் எழுதப்பட்ட, A note from no fire zone என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
A note from no fire zone வெளியீட்டில், விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்டு, இரு சிறுமியர் அரிக்கன் லாம்புகளை அவையோருக்கூடாக எடுத்து வந்திருந்தனர்.
அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவசேவைகளை மருத்துவர் வரதராஜா வழங்கியிருந்ததை நினைவுகூறுமுகமாகவே இந்த லாம்புகள் எடுத்துவரப்பட்டிருந்தன.