இந்நிலையில், சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஒருவருட கால வங்கிக் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக இரண்டு வருடகால கடனுக்கு 75 சதவீத வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறித்த நிவாரணங்களுக்கென அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை சுற்றுலாத் துறையிலுள்ள விடுதிகளுக்கான வற் வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் ஒரு வருடகாலத்துக்கு 5 சதவீதம் வற் வரியே அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதிகளின் பாதுகாப்பு சாதனங்களுக்கான இறக்குமதி வரி நீங்கப்படவுள்ளதாகவும் இதன்போது எரான் விக்ரமரத்ன மேலும் தெரிவித்தார்.