இந்நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டடுள்ளது.
அவ்வகையில், தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், நாளை மறுதினம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாடசாலைகளினதும், மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.