உள்ளீர்ப்பது மிகப்பெரிய ஆபத்து என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தரப்பினருக்கும் இடையே நேற்று யாழில் இடம்பெற்ற சந்திப்பை மேற்கோள் காட்டியே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அத்துடன் இராணுவம் வேண்டாம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது தற்போதைய நிலையில் இராணுவத்தின் பாதுகாப்பு தேவையும் காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஐ.நா. தீர்மானத்தின் ஊடாக சர்வதேச எமது பக்கத்தில் உள்ள நிலையில் தற்போதைய நிலைமை அதனை மழுங்கடித்துவிடாது எனவும் ஐ.நா.வின் ஆதரவை இழந்துவிடக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.