ளுக்கு புனர்வாழ்வு தேவையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு குறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை நியமித்தார்.
இக்குழுவின் அறிக்கை இன்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இவ்வறிக்கை குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிடுகையில், “நாட்டில் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கை கிடைத்துள்ளது. விசேடமாக புலனாய்வுத் துறையைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இராணுவத்தினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டில் புலனாய்வுத் துறை குறித்து எமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக தெரியப்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என்றே நான் கருதுகிறேன்.
இதேவேளை, இஸ்லாம் மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான போதனைகளை அறியாதவர்களே மதத்தை முன்னிலைப்படுத்தி அடிப்படைவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள். இவ்வாறு அடிப்படைவாத கருத்துக்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் முழுமையாக விடுப்பட வேண்டும்.
யுத்த காலத்தில் கைதுசெய்யப்பட்ட போராளிகளுக்கு புனருத்தாபனம் வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்தோடு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வெற்றிகண்டது. இவ்வாறே அடிப்படைவாத கொள்கையால் அடிமையாகியுள்ளவர்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்” என்றார்.