தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்த அறிக்கையே அவரிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு, விஜயராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்திலேயே இந்த அறிக்கை இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலான நிலைமையில், சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், பாதுகாப்புத் தரப்பினர் தற்போது செயற்பட்டுள்ளமையை இட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
அன்று செயற்பட்டதைப்போல் இன்றும் செயற்பட்டுள்ளீர்கள்.
நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு உங்களால் மேற்கொள்ள முடியுமான செயற்பாட்டை மேற்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் நாம் வழங்குவோம்” என்று குறிப்பிட்டார்.