நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “புதிய பயங்கரவாதத சட்டம் குறித்து பிரதமர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஆனால் ஒருங்கிணைந்த எதிரணி என்ற ரீதியில் நாம் இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை.
இந்த சட்டம் குறித்து நாட்டு மக்களும் பிழையான ஒரு கண்ணோட்டத்தையே கொண்டுள்ளார்கள். இது குறித்த தெளிவுப்படுத்தலை மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
எனவே, இந்தச் சட்டம் குறித்து ஆராய்வதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்தை வலியுறுத்திக்கொள்கிறோம். இதுவே, இந்த விடயத்தில் சரியானதாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.