கடும் மழை பெய்யக்கூடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் நேற்று மாலை விசேட வானிலை அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் 20 முதல் 40 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஆரம்பமாகும் மழை இரவு பூராகவும் நீடித்து நாளை வரை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் கடந்த வாரமும் மழை பெய்திருந்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.