அனுபவத்தை பயங்கரவாத தாக்குதல் தந்துள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையில் முஸ்லிம் மக்களின் ஆதரவு பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் ஹற்றனில் இடம்பெற்றது.
ஹற்றன் பூல்பேங் தொண்டமான் தொழிற்பயிற்சி கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மதகுருமார்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஹற்றன் டிக்கோயா நகரசபை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றுகையில், “நாட்டில் 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரம் தமிழ் மக்களின் மனதிலிருந்து இன்னும் விலகவில்லை. அதேபோன்று விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கையும் மக்களின் மனதிலிருந்து விலகவில்லை.
இந்நிலையில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இன்று மக்களுக்கு புதிய அனுபவத்தை உருவாக்கியுள்ளது. இதனால் நாட்டில் சகல இனத்தவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால் இந்த நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத்திற்கு இடங்கொடுக்காமல் அனைவரும் இணைந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த பயங்கரவாத செயற்பாடுகளில் முஸ்லிம் மதத்தவர்கள் சம்மந்தப்பட்டு இருப்பதால் நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாகக் கருதமுடியாது.
முஸ்லிம் மக்கள் நாட்டின் மீது வைத்துள்ள பற்றின் ஊடாக கொடுக்கப்பட்டு வரும் தகவல்களால் பாதுகாப்புத் தரப்பினர் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கூடியதாக இருக்கின்றது.
அதேநேரத்தில் இந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து நாடு அசாதாரண சூழ்நிலைக்கு சென்றுள்ள நிலையில் மலையக பிரதேச மக்களையும் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிசெய்ய வேண்டிய நிலை உள்ளது.
மலையக மக்களின் அமைச்சர் என்ற வகையில் முதன்முறையாக நுவரெலியா மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.