கம்பளையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலைமைத் தொடர்பில் நாம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறினாலும், இந்த தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஏனைய சமூகங்களை விட முஸ்லிம்களுக்கே அதிகமாக இருக்கிறது.
சமூகத்தில் மிகவும் குறைந்த அளவிலானோரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசியல்தலைவர்கள் என்ற ரீதியில் நாம் நடவடிக்கைகளை எடுப்போம். பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.
இலங்கையில் அச்சத்தை தொடர்ந்தும் நீடிக்கச்செய்ய வேண்டும் என்பதே இந்த தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைப்புக்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்துள்ளது.
இதற்கான அனுமதியும் வெளியில் இருந்துதான் வந்துள்ளது. ஆனால், இதனை போக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.
இந்த விடயத்தில் நாம் யார் மீதும் குற்றம் சுமத்தமாட்டோம். அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாகத் துடைத்தெரிய வேண்டும்.” என கூறினார்.