டம் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இடம்பெற்றது.
வருடந்தோறும் இடம்பெறும் தமிழ் மக்களை ஒன்றிணைத்த பேரணி அல்லாது ஒரு கூட்டமாக இன்றைய மே தின நிகழ்வு இடம்பெற்றது.
அண்மையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் அசாதாரண சூழ்நிலையில் மே தினப் பேரணிகள் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பிரகடன உரையை முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா வாசித்தார்.
அந்த பிரகடனத்தில், “கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழர்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கை மையப்படுத்தி சோதனைச் சாவடிகள் அமைத்தும், பலவாறு சோதனைகளை நடத்தியும் தமிழர்களின் இயல்பு வாழ்வை சிதைத்து அவர்களை மீளவும் ஒன்பது ஆண்டுகள் பின்னகர்த்தி 2010 களின் அவல வாழ்வை இன்னொருமுறை அரங்கேற்றுவதாகவே அமைந்துள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மே தினத்தை அனுஷ்டிப்பதற்கும் மக்கள் கூட்டமாக திரள்வதற்கும் அரசு தடை விதித்துள்ளதையம் கடந்து எமத நிலையை, எமது உரிமையை எமது துயரத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறவேண்டிய காலத்தின் தெவை கருதியே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
இலங்கை தேசத்தி்ன ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தையும் ஆக்கிரமிப்பையும் தமது அரசன் கொள்கையாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் இன, மத ரீதியாகவும் மனு தர்மத்திற்கு எதிராகவும் தொழில் தர்மங்களுக்கு மாறாகவும் இலங்கை ஆட்சியாளர்களின் தொழில் உரிமை சாசனங்கள் ஆழமானதும் அகலமானதுமான ஆக்கிரமிப்பு வலுவுடனேயே பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் தமிழர்களின் பொருளாதாரா வளமும் பலமும் நாளுக்கு நாள் சிதைவடைந்து அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலைமை எழுந்துள்ளது என்பதை இம் மே நாள் பிரகடனம் வெளிப்படுத்துகின்றது.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உழைக்கும் ஆற்றல் உடையோரின் தலைமைத்துவற்களையும் பொறுப்பையும் உடையவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி அழைப்பு விடுக்கப்படுகின்றது.
அத்துடன் கல்வி மற்றும் தொழில் துறைகள் குறிப்பாக முன்பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டிருப்பவை விடுவிக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஈழத்தின் கடல் வளம் இந்திய இழுவைப் படகுகளால் சுரண்டப்படுகின்றமை, இராணுவ மேலாதிக்கம், வேலையின்மை, குறைந்த கூலி, கடல் வள இராணுவ ஆக்கிரமிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்படுகின்றது.
மேலும், சுதந்திரம் வேண்டிப் போராடுகின்ற ஒரு தேசிய இனத்தின் இருப்பையும் மக்களின் வாழ்வையும் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனின் பொருளாதார சுதந்திரமும் பொருண்மிய வாய்ப்புக்களும் அத்தியவசியம் என்பதனை இப்பிரகடனம் வலியுறுத்துகின்றது.
தேசிய இனத்தின் விடுதலைப்வ போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் முகமாகவே அரசும் அதன் பொறிமுறைகளும் கங்கணம் கட்டிச் செயற்படுவது வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுகின்றது.
எனவே உலகளாவிய தொழிலுரிமைக்கான நிறுவனங்கள் தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையையும் மரபுரிமையையும் உறுதிப்படுத்துவதற்கு கனதியான அழுத்தங்களை இலங்கை அரசு மீது பிரயோகிக்க வேண்டுமென்று தாயக தொழிலாளர்கள் சார்பில் இப்பிரகடனம் அறைகூவல் விடுக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.