செய்வதை சீன அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக, கனேடிய விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கியூபெக்கை தளமாகக் கொண்டு செயற்பட்டுவந்த இரு பிரதான ஏற்றுமதியாளர்களிடமிருந்து சீன அரசாங்கம் பன்றி இறைச்சி இறக்குமதி செய்து வந்தது.
இந்நிலையில், குறித்த இருவரிடமிருந்து பன்றி இறக்குமதி செய்வதை சீனா நிறுத்தியுள்ளது.
சீனாவின் இந்த செயற்பாட்டிற்கான காரணம் தெரியாத போதிலும், இந்த நிலையை விரைவில் சரிசெய்யலாம் என எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி நிறுத்தம் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டுவரும் அதேவேளை, இது தொடர்பான தெளிவான விளக்கத்தை சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பதாக கனேடிய பன்றி இறைச்சி ஏற்றுமதி சபை தெரிவித்துள்ளது.