நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்கேரியாவிற்கு விஜயம் செய்த பாப்பரசர், உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையான பல்கேரியா கிழக்கு மரபுவழி திருச்சபையின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆனால், இதன்போது கூட்டு பிரார்த்தனை நிகழ்வில் பங்கேற்பதனை இரு தரப்பினரும் ஏற்கனவே நிராகரித்திருந்தனர்.
பல்கேரியா மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய பகுதிகளுக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு அங்கமாக இந்த பல்கேரிய விஜயம் அமைந்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையான கிழக்கு மரபுவழி திருச்சபையுடனான உறவை பலப்படுத்தும் நோக்கில் பாப்பரசரின் இவ்விஜயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.