மே மாதம் ஆறாம் திகதி பிறந்த இக்குழந்தை இங்கிலாந்து அரச அரியணைக்கான வரிசையில் ஏழாவது இடத்தை வகிக்கிறது.
இந்தநிலையில் அரச குடும்பத்தின் புதிய வாரிசிற்கு ஜேர்மன் சேன்ஸலர், பவேரிய அரச தலைவர் உள்ளிட்ட பலரும் பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளனர்.
ஹரியின் தந்தை சார்லசும் அவரது மனைவி கமீலாவும் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தபோது, ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier குட்டி இளவரசர் ஆர்ச்சிக்காக ஒரு கரடி பொம்மையை பரிசளித்துள்ளார்.
பவேரிய அரச தலைவர் Markus Söder ஜேர்மன் பாரம்பரிய உடைகளில் ஒன்றான lederhosen என்ற உடையை குட்டி இளவரசருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த பரிசுப்பொருட்களை ஹரியின் தந்தை சார்லஸ் தனது பேரக்குழந்தையான ஆர்ச்சி ஹரிசனுக்கு வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.