(ஜெ.ஜெய்ஷிகன்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலினால் பீதியடைந்துள்ள பெற்றார்களை விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.00 வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஐPவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.எஸ்.தனஞ்சய பெரமுன, உதவிப் பொறுப்பதிகாரி ஜெயசிங்க, பிரதேச பொலிஸ் ஆலோசனைக் குழுவின் தலைவர் சுனில் டீ கமால்தீன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலளர் க.ஜெகதீஸ்வரன், பழைய மாணவர் சங்க செயலாளர் பு.சுதன், மற்றும் பழைய மாணவர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் பெற்றார்களால் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு பொறிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய நுழைவாயில்கள் பெற்றார்களின் ஒத்துழைப்புடன் மூடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெற்றார், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சீசீரீவி பாதுகாப்பு கமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளையும் பெற்றார்களின் ஒத்துழைப்புக்களுடன் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.