நான்கு பேர் பயணிக்கக்கூடிய விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. ஆனால், விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் எத்தனை பேர் விமானத்தில் இருந்தனர் என்ற தகவல் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.
இதுவரை ஒருவரின் உயிரிழப்பே உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.