சீன பொருட்களுக்கான வரியை 200 பில்லியன் டொலர் அளவுக்கு மேலும் அதிகரித்து ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரி அதிகரித்து இருப்பதாகவும் இந்த நடைமுறை உடனடியாக அமுலில் வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே காணப்பட்ட வர்த்தக முரண்பாடுகளை தீர்த்து, சுமூகமாக வர்த்தக உடன்பாடொன்றை எட்டுவதற்காக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த அதிரடியை மேற்கொண்டிருப்பது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆழ்ந்த வருத்தத்தை சீனா வெளியிட்டுள்ளது. அதேநேரம் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் சீனா அறிவித்துள்ளது. இதனால்