அதனை முற்றாக அழிப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பாடசாலைகள், மத ஸ்தலங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.
எவ்வாறாயினும், இந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை. இது சர்தேச பயங்கரவாதமாகும். இதனை தோற்கடிக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் அவசியமாகும்.
புலிகளை தோற்கடிக்க சர்தேச புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புக்கள் காணப்பட்டன. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு என்றால் சர்வதேச இராணுவத்தை இலங்கைக்குள் அனுமதிப்பது என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.