குறித்து எந்ததொரு தீர்மானமும் எடுக்கவில்லையென மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் குடியேற்றுவது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் சிவில் அமைப்புக்களுடனான சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளியாகிய தகவல் பெய்யானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரியதர்சன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பத்திரிகையொன்றின் ஊடாக வெளிவந்த பிழையான தகவலே நாங்கள் இந்த ஊடக சந்திப்பை மேற்கொள்ள காரணமாகும். இந்த விடயம் தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்து கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டோம். ஆனால் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு காரணம், நாங்கள் தேசிய மனித உரிமை ஆணைக்குழு என்ற ரீதியில் பொறுப்புணர்வுடனும், சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை சாசனங்களை கவனமாக கையாள வேண்டிய தரப்பினராக இருக்கின்றமையால் நாங்கள் தலைமை காரியாலயத்திற்கு இவ்விடயம் குறித்து அறிவித்திருக்கிறோம்” என பிரியதர்சன தெரிவித்துள்ளார்.