ஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இன்று பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் வருகைதந்துள்ள ஜெரமி ஹண்ட் செய்தியாளர்களிடம் பேசியபோதே போர் மூளும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஹண்ட் தெரிவிக்கையில்,
இந்த விடயத்தை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். மீண்டும் அணுவாயுத ஒப்பந்தத்தை பின்பற்றுவதற்கு ஈரானைத் தூண்டுவதே அனைவரதும் நோக்கம்.
ஈரான் ஒரு அணுவாயுதசக்தி நாடாக மாறினால் அதன் அண்டை நாடுகளும் அணுவாயுதசக்தி நாடாக மாறுவதற்கே விரும்புவார்கள். அது தவறான திசைக்கான ஒரு பாதையாக அமையும் என தெரிவித்துள்ளார்.
அணுவாயுத ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஈரான் மீறினால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென லண்டனில் கடந்த வாரம் பொம்பியோ உடனான சந்திப்பின் பின்னர் ஹண்ட் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.