தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் 10 பேரின் ஊடல்கள் பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) புதைக்கப்பட்டன.
குறித்த உடல்கள் எந்தவொரு மத அனுட்டானங்களும் இன்றி புதைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவத்தார்.
இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மத அமைப்புக்கள் பலவற்றின் கோரிக்கைக்கு அமைவாக பொலிஸாரால் இந்த சடலங்கள், எந்தவொரு தொழுகை, அனுட்டானங்களும் நடத்தப்படாமல் புதைக்கப்பட்டதாக ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
எனினும் தற்கொலை குன்டுதாரிகள் குன்டுகளை வெடிக்கவைத்த போது அதில் உயிரிழந்த 6 குழந்தைகளின் சடலங்கள் மட்டும் தொழுகைகள் மற்றும் மார்க்க அனுட்டானங்களின் பின்னர் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.