கியூபெக், ஓட்டாவில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால், தற்போது அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பகுதிகளில் உள்ள மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி, கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில், குறித்த பகுதியில் 3.6 அங்குலங்கள் (9.1 சென்டிமீட்டர்கள்) மழை பெய்யும். வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நிலைமை இந்த வார இறுதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.