அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சட்டத்தின் ஊடாக போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் சரத்துக்கள் உள்ளன. இதற்கான அதிகாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளன.
இந்த சட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை நினைக்க மட்டும்தான் முடியுமே தவிர, அதனை காட்சிப்படுத்தக்கூட முடியாத சரத்துக்கள் உள்ளன. அத்துடன், இது பாரிய மனித உரிமை மீறலாகும். இந்த சட்டத்தில் மனித உரிமைக்கு எதிரான சரத்துக்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம்.
2017 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் இருப்பதை அரசாங்கம் அறிந்திருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், ஏன் இதற்கெதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுகுறித்து கேட்டமைக்கு இதனைக் கட்டுப்படுத்த சட்டமில்லை என்று கூறினீர்கள்.
ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களை கட்டுப்படுத்த மட்டும் சட்டங்களை பாராது கட்டுப்படுத்தினீர்கள். இது பாரதூரமான குற்றமாகும்.
துருக்கி வழியாக சிரியா சென்ற தீவிரவாதி குறித்து அரசாங்கம் அறிந்துக்கொண்டிருந்தது. இந்த தீவிரவாதிதான் தெஹிவளையில் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர். அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், அரசாங்கம் மௌனமாகவே இருந்தது” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.