ரொறன்ரோவில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புனித றமழான் நோன்பை கடைப்பிடிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
றமழான் மாதத்தில் மசூதிகள் பக்தர்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலக நடப்புகளை நோக்கும்போது மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒமர் ஃபாரூக் தெரிவித்தார்.